உக்ரைன் மீது போர்தொடுக்க தயார் நிலையில் ரஷ்யா?: இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் உத்தரவு..!!

Author: Rajesh
15 February 2022, 12:04 pm

கிவ்: போர்மேகச்சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதால், பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக காட்டுகிறது. மாக்சர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படங்களில் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்நிலையில், இந்தியாவில் போர்சூழல் உருவெடுத்துள்ளதால், அங்குள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!