கிவ்: போர்மேகச்சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதால், பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக காட்டுகிறது. மாக்சர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படங்களில் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்நிலையில், இந்தியாவில் போர்சூழல் உருவெடுத்துள்ளதால், அங்குள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.