உக்ரைன் நாட்டில் இருந்து இந்திய தூதரகம் மாற்றம் : போர் தீவிரமடைந்து வருவதால் போலந்து நாட்டில் செயல்படும் என அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2022, 4:17 pm
உக்ரைன் மீது ரஷ்யா நாளுக்கு நாள் தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது. 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்திக்கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அங்கு உள்ள நிலைமையில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.