50 முறை சுத்தியால் அடித்து கொலை… அமெரிக்காவில் அடுத்தடுத்து இரு இந்திய மாணவர்கள் கொலை… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 2:10 pm

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள லித்தோனியாவில் உள்ள கடையில் பகுதிநேர ஊழியராக பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் சைனி என்பவரை மர்ம நபர் ஒருவர் சுத்தியால் அடித்து கொலை செய்தார். சுமார் 50க்கும் மேற்பட்ட முறை சுத்தியால் தலையில் கொடூரமாக தாக்கி அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக துரிமாக செயல்பட்ட போலீசார், ஜுலியன் ஃபால்க்னர் என்ற நபரை கைது செய்தனர். அவரது உடல் இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விவேக் சைனி அடித்து கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அமெரிக்காவில் பர்டூர் பல்கலை.,யில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சாரியா பல்கலை., வளாகத்தில் கடந்த 28ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். மகனை காணவில்லை என்று அவரது தாயார் புகார் அளித்த நிலையில், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

https://twitter.com/i/status/1752196764697026826

அமெரிக்காவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், இந்திய மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?