இலங்கையில் தீவிரமடைந்த போராட்டம்.. அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் மீது கொடூர தாக்குதல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 2:31 pm

இலங்கையில் ராஜபக்சேக்கள் அரசு பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் பொதுமக்கள் கூடாரங்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் சிங்களர், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என மூவின மக்களும் இணைந்து பங்கேற்றுள்ளனர். இப்போராட்டம் இடைவிடாமல் நடைபெறுவதால் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று பதவி விலகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில் மகிந்த ராஜபக்சேவும் இதனை சூசகமாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் முதலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் கொழும்பு காலிமுகத்திடல் நோக்கி சென்றனர். அங்கு போராட்டகாரர்களின் கூடாரங்களுக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் மீது நீர் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடிக்க முயற்சித்தனர்.
ஆனாலும் ராஜபக்சே ஆதரவு குண்டர்கள் வெறியாட்டம் தொடருகிறது. மேலும் கொழும்புவில் முகாமிட்டிருந்த இளைஞர் அதிபர் மாளிகையை முற்றுகையிட முன்றார். அப்போது ராஜபக்சே ஆதரவாளர்கள் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ராஜபக்சே அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கொழும்பில் பதற்றம் நீடித்து வருவதால் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2155

    0

    0