கொலை வழக்கு கைதியுடன் உல்லாசம்… சிறை பெண் ஊழியரின் காம லீலை ; லீக்கான புகைப்படங்களால் எழுந்த சிக்கல்…!!
Author: Babu Lakshmanan5 May 2023, 1:39 pm
கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதியுடன் உல்லாசமாக இருந்த சிறை பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் கடந்த 2021ம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஜோர்டானுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவர் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜோர்டான் மேலும் பல பெண்களை இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோர்டானுடன் 32 வயது சிறை பெண் ஊழியர் ஒருவர் ரகசியமாக உல்லாசமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காத நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் ஆதாரமாக சிக்கியுள்ளது.
இதனால், பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த பெண் ஊழியர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அந்த பெண் மீது லண்டன் போலீசார், தவறான நடத்தை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.