தவறான சிக்னல் காட்டியதால் விபரீதம்… இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஜப்பானில் மீண்டும் மீண்டும் நடக்கும் சோகம்!!
Author: Babu Lakshmanan2 February 2024, 5:42 pm
ஜப்பானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
கடந்த மாதம் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரிய நாட்டு விமான, கேத்தே பசிபிக் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்த இரு சம்பவங்கள் நடந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் விமான விபத்து நடந்துள்ளது. ஹோன்சு தீவின் கன்சாய் பிராந்தியத்தின் முக்கிய நகரமான ஒசாகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏஎன்ஏ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மீது, புகுவோகாவில் இருந்து வந்து தரையிறங்கிய விமானம் நேருக்கு நேர் மோதியது. இதில், விமானத்தின் முன்பக்க இருக்கைகள் பெரிதும் சேதமடைந்தது.
விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சிக்னலால் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த விபத்து காரணமாக தற்காலிகமான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.