அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்திய வம்சாவளியினர் கடத்தல் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்?!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 12:51 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(வயது 36), மனைவி ஜஸ்லீன் கவுர் (வயது 27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங் (வயது 39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், ஆபத்தானவர்கள் எனவும் கூறிய போலீசார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கடத்தலுக்கான காரணம் மற்றும் நோக்கம் ஆகியவை பற்றி கூறாத போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Close menu