‘இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க’…பூக்கள் பூக்காததால் பராமரிப்பாளர்களுக்கு சிறை: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு..!!
Author: Rajesh16 February 2022, 5:52 pm
வடகொரியா: அரசு தோட்டத்தில் பூக்கள் பூக்காததால் பராமரிப்பாளர்களை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிறையில் அடைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சர்வாதிகாரத்திற்கு பெயர் பெற்ற நாடு வடகொரியா. கடந்த ஆண்டு டிசம்பரில் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்-இல் நினைவு நாளை முன்னிட்டு 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மக்கள் சிரிக்கவோ, மது அருந்தவோ, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கவோ தடை விதிக்கப்பட்டது.
கிம் ஜாங் உன் ஆண்டுதோறும், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார். இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆன இன்று கிம் ஜாங்-இல்லின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அரசு தோட்டத்தில் பூக்கள் எதுவும் பூக்காததால், இந்த விஷயம் கிம் ஜாங் உன்னிற்கு தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டு, கடும் கோபம் அடைந்துள்ள கிம் ஜாங் உன் தோட்டக்காரர்கள் குழு ஒன்றை அதிரடியாக சிறை முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
1988ல் வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஜப்பானிய தோட்டக்கலை நிபுணர் ஒருவரால் கலப்பின முறையில் புதிதாக உருவாக்கப்பட்ட பூ தான் கிம்ஜோங்கிலியாஸ். இந்த பூ தற்போது மலரவில்லை என்பதாலையே ஹான் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
0
0