உலக அரங்கையே திரும்பி பார்க்க வைத்த மைபி கிளார்க்… நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த முழக்கம் ; யார் இவர்..?

Author: Babu Lakshmanan
5 January 2024, 4:47 pm
Quick Share

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று நியூசிலாந்து. அந்த நாட்டின் 170 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக 21 வயது இளம்பெண் ஒருவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், மௌரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மைபி கிளார்க் தான் நியூசிலாந்து நாட்டிலேயே இளம் பெண் எம்பி ஆவார்.

முதல்முறையாக இவர் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, மௌரி பழங்குடியினரின் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை முழங்கிவிட்டு தனது உரையை தொடங்கினார். அவரது முழக்கம் உலகம் அளவில் வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதனால், மைபி கிளார்க் என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மைபி கிளார்க் திடீர் அரசியல்வாதி அல்ல என்றும், அவரது குடும்பமே அரசியல் குடும்பம் என தெரிய வந்துள்ளது. அவரது தாத்தா வயர்மு கட்டேனே நியூசிலாந்தின் மௌரி பகுதியின் முதல்வராக இருந்தவர் ஆவார். இவரது அத்தை ஹனா தே ஹேமாரா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

ஹாமில்டனில் நடந்த அடிமைத்தனம் மற்றும் மாவோரி பழங்குடியினர் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக மைபி கிளார்க்கின் குடும்பமே போராடியது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/i/status/1743003735112962184

தற்போது இவர்களைத் தொடர்ந்து, மவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் பாதுகாவலனாக நினைத்து மைபி கிளார்க் செயல்பட்டு வருகிறார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1646

    0

    0