கிறிஸ்துவ திருமண விழாவில் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்ததால் மணமக்கள் உள்பட 120 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடமேற்கே அமைந்துள்ளது நினேவே மாகாணம். இந்த மாகாணத்தின் அல்-ஹம்தானியா நகரத்தில் பெரும்பாலும் கிறிஸ்துவ மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வாரம் அங்குள்ள திருமண மண்டபத்தில் கிறிஸ்துவ திருமணம் ஒன்று நடைபெற்றது. இதையொட்டி, உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் திருமண மண்டபத்தில் குவிந்திருந்தனர். அப்போது, மணமக்கள் இருவரும் மேடையில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அந்த சமயம் மணமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக மண்டபத்திற்குள் பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பட்டாசுகளில் இருந்து வெளியேறிய நெருப்பு, மண்டபத்திற்குள் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களில் தீப்பிடித்தது. இதையடுத்து, மளமளவென பற்றி எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் மண்டபம் முழுவதிலும் பரவியது. இதனால் மண்டபத்தில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.
மணமக்கள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். எனினும் மண்டபத்தில் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டதால் அவர்களால் வெளியேறமுடியவில்லை. மேலும், தீவிபத்தினால் மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதியும் இடிந்து விழுந்தது. இதில் பலர்
இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த கோர விபத்தில் மணமக்கள் உள்பட 120 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனிடையே, இந்தத் தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நடந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.