மீண்டும் பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம்.. அலறும் உலக நாடுகள் : கொரோனாவின் அடுத்த அலையா?!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2023, 1:27 pm
மீண்டும் பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம்.. அலறும் உலக நாடுகள் : கொரோனாவின் அடுத்த அலையா?!
இந்த மாதத்தின் முதல் வாரத்தில், அதாவது டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூரில் பதிவான கொரோனா 56,043ஆக அதிகரித்துள்ளது. இப்படி கொரோனா திடீரென அதிகரிப்பதால் சிங்கப்பூரில் உள்ள சுகாதார அமைச்சகம் பொதுமக்களை மாஸ்க் அணிய அறிவுறுத்தியுள்ளது.
நெரிசலான இடங்கள் குறிப்பாக உள்ளரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோர் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், காற்றோட்டம் இல்லாத இடங்களில் அதிக நபர்கள் ஒன்றுகூடுவதையே தவிர்க்குமாறும் சிங்கப்பூர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 பேருக்கு கொரோனா உறுதியானது. இது முந்தைய வாரத்தில் பதிவான 32,035விட அதிகமாகும்.
அதேபோல கொரோனாவால் மருத்துவமனையில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கையும் முந்தைய வாரத்தில் 225ஆக இருந்த நிலையில், அதுவும் 350 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் ஒரே வாரத்தில் நான்கில் இருந்து ஒன்பதாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் இப்படி கொரோனா திடீரென அதிகரிக்க ஓமிக்ரான் BA.2.86இல் இருந்து பிரிந்த ஜேஎன் 1திரிபு தான் காரணம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் அரசு மேலும் கூறுகையில், “இப்போது நம்மிடம் இருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச தரவுகளை வைத்துப் பார்க்கும் போது BA.2.86 அல்லது JN.1 வகை கொரோனா வேகமாக பரவுகிறது அல்லது தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்றார்.
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலைமையைச் சமாளிக்கச் சிங்கப்பூர் அரசு அங்குள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. அவசியமற்ற தேர்வுகளை ஒத்திவைப்பது, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதைச் சமாளிக்கச் சிங்கப்பூர் அரசு இரண்டாவது கொரோனா செண்டரை ஹால் 10 என்ற இடத்தில் தொடங்கியுள்ளது. கடுமையான சுவாச நோய்த்தொற்று பாதிப்பு இருந்தால் மாஸ்க் அணியும்படி சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவது மட்டுமின்றி தனிமனித இடைவெளி, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நெரிசலான இடங்களிலும் விமான நிலையங்களிலும் மாஸ்க் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேக்சின் நடவடிக்கை காரணமாகவே இப்போது கொரோவனால் ஏற்படும் தீவிர பாதிப்பு குறைந்துள்ளதாகச் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது தொடர்பாகத் தினசரி தினசரி அறிவிப்புகளை வெளியிடவும் சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.