உக்ரைனில் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய போர்க் காட்சி: லட்சக்கணக்கில் வானில் இருந்து இறங்கிய ரஷ்ய படைகள்..!!(வீடியோ)

Author: Rajesh
24 February 2022, 1:47 pm

உக்ரைன் நாட்டின் விமானத் தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யா கடந்த பல மணி நேரமாக உக்ரைனில் முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு உரிய பதிலடி தரப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/i/status/1496757946180587524

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படையினர் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. கீவ் விமான நிலையம் மற்றும் ராணுவ தளங்களை ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்கி வருகிறது ரஷ்யா. மேலும், ரஷ்ய படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராசூட் மூலம் உக்ரைனுக்குள் நுழையும் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

https://twitter.com/i/status/1496731773308444675
courtesy

ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1826

    0

    0