காசாவில் தீவிரமடையும் தாக்குதல்… தவறுதலாக பிணைக்கைதிகள் 3 பேர் சுட்டுக்கொலை ; இஸ்ரேல் ராணுவம்

Author: Babu Lakshmanan
16 December 2023, 8:50 am

காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தவறுதலாக பிணைக்கைதிகள் 3 பேரை சுட்டுக்கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவை தொடர்ந்து, தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸின் முக்கிய இடமான ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே நேரடி சண்டை நிலவி வருகிறது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனிடையே, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் என தவறுதலாக நினைத்து 3 பிணைக்கைதிகளை சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய இஸ்ரேல் ராணுவம், சுட்டுக்கொலை செய்யப்பட்ட 3 பேரில் 2 பேரின் விபரங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 240க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாக்குதலை தீவிரப்படுத்தி அவர்கள் மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!