ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சிக்கு மேலும் 6 ஆண்டு சிறை : ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Author: Babu Lakshmanan15 August 2022, 8:05 pm
பாங்காக் : மியான்மரில் ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்பட்ட, மூத்த அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு, ஊழல் வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மியான்மரில் 2020ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வென்றது. ஆனால் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அரசைக் கவிழ்த்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அதில் ஏற்பட்ட வன்முறையில் பலர் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சூச்சி மீது ராணுவ அரசு பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் நான்கு ஊழல்கள் வழக்குகளில் இன்று நடந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூச்சிக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ராணுவ கோர்ட்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ‘வாக்கி டாக்கி’ தொலை தொடர்பு சாதனம் வாங்கியதில் மோசடி செய்தது, கொரோனா தடுப்பு விதிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில் சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.'[