இனி அரசு பதவிகளை நெனச்சு பாக்கவே முடியாது… எம்பி பதவிக்கும் ஆபத்து : இம்ரான்கானுக்கு தேர்தல் ஆணையம் வெத்த செக்!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2022, 4:42 pm
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது எம்.பி.பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை பொதுபதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.