NO KISS, NO HUG… மக்களே, உங்க உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கி வையுங்க : கொரோனா பரவலால் சீனாவில் புது RULES!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 5:07 pm

சீனா : கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் முத்தமிட, கட்டியணைக்க கூடாது உள்ளிட்ட விதிகளை போட்டுள்ளது சீனா.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உலக நாடுகள் ஸ்தம்பித்தது. இந்த நிலையில் அனைத்து நாடுகளிலும மெல்ல கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் எங்கே கொரோனா ஆரம்பித்ததோ அங்கேயே மீண்டும் பாதிப்புகள் தொடங்கியள்ளது. சீனாவில், தற்போது மீண்டும் பிரச்னை ஏற்படத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் விறுவிறுவென பரவும் கொரோனா மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் நகரில் மட்டும் 2.6 கோடி மக்கள் வசித்து வருகின்றனப். கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஷாங்காய் நகரில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் முடக்கத்தை அறிவித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் சீனா இந்த முறை அதீத கவனம் செலுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய முயற்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வீதி தோறும் சுகாதார பணியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மக்களே, உங்க ஆசைகள், சுதந்திரத்தை கொஞ்ச கட்டுப்படுத்திக்கோங்க என தெரிவித்துள்ள சீன அரசு, ஜன்னலை திறந்து பாட்டுப்பாட வேண்டாம், இன்று முதல் தம்பதிகள் ஒன்றாக தூங்க வேண்டாம், முத்தமிடவும், கட்டிப்பிடிக்கவும் அனுமதியில்லை. தனித்தனியாக சாப்பிட வேண்டும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!