இங்கிலாந்து மன்னர் பிறந்தநாளில் இந்திய வம்சாவளியினருக்கு கவுரவம் : 40 மருத்துவர்களுக்கு விருது வழங்க முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 1:43 pm

இங்கிலாந்து பிரதமர் 3ஆம் சார்லஸ் தனது 74வது பிறந்தநாளை வரும் நவம்பர் 14இல் கொண்டாட உள்ளார். இவர் பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

அந்த வகையில், இதுவரை பரிந்துரைக்கப்பட்ட குழு பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு லண்டனில் இங்கிலாந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பணியை வெளிப்படுத்தியுள்ளனர். 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள்.

இந்த பட்டியலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, அனுஜ் சண்டே, ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் ஆகியோர் உள்ளனர். இதற்கான பட்டியலை இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 595

    0

    0