பாக்., எல்லையில் குண்டுவெடிப்பு : பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் 5 பேர் உடல் சிதறி பலி… 30 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 8:46 pm

பாகிஸ்தான் : ஈரான் ஆப்கான் எல்லை ஒட்டியுள்ள பகுதியில் திடீரென குண்டுவெடித்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி மாவட்டத்தில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். அவர்கள் நால்வரும் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களாவர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் பாதுகாப்பு படை வீரர்கள். மேலும் 5 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பலூசிஸ்தான் முதலமைச்சர் மீர் அப்துல் குத்தூஸ் பிசெஞ்ஜோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த பலூசிஸ்தான் பகுதி, ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. நீண்ட காலமாகவே பயங்கரவாத தாக்குதல் வாடிக்கையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 2209

    0

    0