காரில் குடியும் கும்மாளம்… பாகிஸ்தான் பிரதமரின் வளர்ப்பு மகனை கைது செய்த போலீசார்..!! மேலிடத்தில் இருந்து திடீரென வந்த உத்தரவால் ‘ஷாக்’!!

Author: Babu Lakshmanan
23 February 2022, 9:37 am

காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவி வகிப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். இம்ரான் கானை புஷ்ரா திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக தனது முன்னாள் கணவருடன் இணைந்து மூஸாவை பெற்றெடுத்தார்.

இதனிடையே, ரஷ்ய அதிபரை சந்திப்பதற்காக, இம்ரான் கான் ரஷ்யா சென்றுள்ள நிலையில், காரில் மதுபானம் வைத்து கடத்தியதாக இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா மற்றும் அவருடன் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட தினமே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில், மது விற்பனை மற்றும் நுகர்வு சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!