முடியாது… முடியாது… நீங்க மீண்டும் நடத்துங்க : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… அதிர்ச்சியில் இம்ரான்கான்..!!!

Author: Babu Lakshmanan
7 April 2022, 10:24 pm
Quick Share

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. பாகிஸ்தானில் உள்ள 342 எம்.பிக்களில் 172 பேரின் ஆதரவை பெற்றால்தான் ஆட்சியை தக்க வைக்கும் நிலை இம்ரான்கானுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவருக்கு அந்த அளவு ஆதரவு இல்லை. அதேவேளையில் எதிர்க்கட்சிகளுக்கு 177 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. இதனால், இம்ரான் கான் ஆட்சி கவிழும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் காசிம் கான் நிராகரித்தார். மேலும், பாகிஸ்தன் நாடாளுமன்றம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் மேலும் ஒரு திருப்பமாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே என்று கூறியுள்ள இம்ரான் கான், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கும் தடை இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 1915

    0

    0