உக்ரைனில் இருந்து உடைந்த பாலம் வழியே வெளியேறும் மக்கள்: வழிவிட்டு ஒதுங்கிய ரஷ்ய படைகள்…மனதை உலுக்கும் புகைப்படங்கள்.!!
Author: Rajesh9 March 2022, 7:23 pm
இர்பின்: உக்ரைன் அகதிகள் உடைந்த பாலத்தில் பயணித்து அண்டை நாடுகளுக்கு செல்லும் உக்ரைன் மக்களுக்கு ரஷ்ய ராணுவமும் வழிவிட்டு அவர்கள் நாட்டை விட்டுச் செல்ல அனுமதி அளித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 15 நாட்களாக நீடித்து வருகிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் குடிமக்கள் தற்போது அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அகதிகளாக அண்டை நாடுகளான ஹங்கேரி, போலந்து, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

இவர்களுக்கு தற்போது உக்ரைன் நாட்டில் போர் புரிந்து வரும் ரஷ்ய படைகளை ஒதுங்கி வழிவிடத் துவங்கியுள்ளன. தங்களது உடமைகள், குழந்தைகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு குளிர் நிறைந்த நிறைந்த கரடுமுரடான பகுதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பல நாட்களாக பயணித்து அண்டை நாடுகளைச் சென்றடைகின்றனர்.

தலைநகர் கீவ்வின் வடமேற்கு பகுதியில் உள்ள பூச்சா, ஈர்ப்பின் நகரங்களிலிருந்து உடைந்துபோன பாலத்தைத் தாண்டி குடிமக்கள் பலர் நடந்து செல்லும் காட்சி மனதை காண்போரை கவலை அடையச் செய்கிறது.

இவர்கள் செல்லும் வழியில் காடுகள், ஆறுகள் என பல குறுக்கிட்டாலும் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்க பலர் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் புகைப்படங்கள் வெளியாகி வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.