நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை இல்லை!!
Author: Rajesh29 January 2022, 11:54 am
ஆக்லாண்டு: நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள இந்த தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வலது பக்கத்தில் தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் தீவுக்கூட்டமான டோங்காவில் கடந்த 14ம் தேதி எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுனாமி அலைகளும் ஏற்பட்டது. எரிமலை வெடிப்பு ஏற்பட்டு இரு வாரங்களே ஆன நிலையில் தற்போது தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.