பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா…நிபந்தனை விதித்த உக்ரைன் அதிபர்: பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி ‘நோ’..!!

Author: Rajesh
27 February 2022, 2:02 pm

உக்ரைன்: பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்ததையடுத்து, பெலாரஸில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது 4வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த புதின் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர். உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுத்தது.

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் தங்கள் நாட்டின் பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என உக்ரைன் மறுத்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் பயன்படுத்தப்படுவதால் பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுஒருபுறம் இருக்க, உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவும், கப்பல் மற்றும் வான்வழியாக ஏவுகணை தாக்குதல் நடத்தவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • dhanush nayanthara நான் அவரை காதலிக்கிறேன்… சுள்ளுன்னு சூடேறிய சுள்ளான் – தோண்ட தோண்ட வரும் ரகசியம்!
  • Views: - 1472

    0

    0