பொருளாதார தடை எதிரொலி… புதின் எடுத்த முடிவு : சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேற ரஷ்ய அரசு திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 10:47 pm

உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேற ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.

உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவை வர்த்தகம் மேற்கொள்வதற்கு மிக சாதகமான நாடு என்ற பட்டியலில் இருந்து ரஷ்யாவை நீக்கியது.

இதற்கு பதிலடியாக உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவது பற்றி பரீசிலித்து வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய சபாநாயகர் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…