நீங்கள் அதிகாரத்தை பிடியுங்கள்… உக்ரைன் ராணுவத்திற்கு புதின் திடீர் அழைப்பு!

Author: kavin kumar
25 February 2022, 10:44 pm

உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்தார். இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என புதின் தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1636

    0

    0