கடும் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்கே : 6வது முறையாக பதவியேற்பு… நாளை 15 அமைச்சர்கள் பொறுப்பேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2022, 7:31 pm
ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியிருந்தது.
இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கான கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அளித்திருந்தார்.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தற்போது பதவியேற்றுள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து, புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.
15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை காலை பதவி பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க 6வது முறையாக பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0