நிலா.. நிலா.. ஓடிப் போ.. பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்லும் நிலவு: நேரத்தில் நிகழவுள்ள பெரிய மாற்றம்..!

Author: Vignesh
3 August 2024, 7:39 pm

அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிலா குறித்து ஆய்வு செய்தனர். 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறையை அடிப்படையாக வைத்து நடந்த இந்த ஆய்வில்,பூமியின் துணைக்கோளான நிலா, பூமியை விட்டு மெதுவாக விலகிச் செல்வதாகவும், இதனால் அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் எனவும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலாவானது பூமியை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது. இதனால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இது இப்படியே நீடித்தால் அடுத்த 20 கோடி ஆண்டில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும்.140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை இதற்கு காரணமாக உள்ளது.

இதன் சக்திகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிலா விலகிச் செல்கிறது. நிலா மெதுவாக விலகி செல்வதால் பூமியின் சுழலும் திறன் குறையும்.எனவும்
விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!