Rules எல்லாருக்கும் ஒண்ணுதான் : தொற்று பரவலால் தனது திருமணத்தை தள்ளி வைத்த பிரதமர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 12:20 pm

நியூசிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறரு. இதனால் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் நியூசிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.இதையடுத்து நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். ஆர்டெர்ன் தனது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டை திருமணம் செய்ய இருந்த நிலையில் திருமண தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்தில் இதுவரை 15,104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 8386

    0

    0