குண்டு மழை பொழியும் ரஷ்ய படைகள்…உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல்: வெளியுறவுத்துறை அதிர்ச்சி தகவல்..!!

Author: Rajesh
4 March 2022, 8:48 am

கிவ்: உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த இடத்தில் தான் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின்நிலையமான சபோரிஷியா அணுமின்நிலையம் உள்ளது.

இந்த அணுமின்நிலையத்தில் நாட்டின் 15 உலைகளில் ஆறு உலைகள் உள்ளன. 1986ம் ஆண்டு உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், சபோரிஷியா அணுமின்நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தகவல் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலில் அணுமின் நிலையம் தீப்பிடித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை நான்கு புறமும் சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. சபோரிஷியா அணுமின் நிலையம் வெடித்தால், அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?