போர்பதற்றம் தணிகிறது ?: உக்ரைன் எல்லையில் படைகளை குறைக்கும் ரஷ்யா..!!

Author: Rajesh
15 February 2022, 4:43 pm

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா படைகள் திரும்பி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால் ரஷியா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என 12க்கும் அதிகமான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

ஜப்பான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள், தங்கள் தூதரக அதிகாரிகளையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளன. இதனால் படையெடுப்பு குறித்த அச்சம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவித்தது.

உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்கிற ரீதியில் என சர்வதேச ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்யா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2122

    1

    0