உக்ரைன் தலைநகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலி…உக்ரைன் அரசு அறிவிப்பு..!!
Author: Rajesh24 பிப்ரவரி 2022, 6:35 மணி
கீவ்: உக்ரைன் மீது காலை முதல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்-ஐ அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வந்தது. ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, ரஷ்யப்படைகள், கிழக்கு உக்ரைன் வழியாக நாட்டிற்குள் நுழைந்து, உக்ரைன் ராணுவ தளங்களை அழித்து வருகிறது. உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷியா தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதலில் ரஷியாவின் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என உக்ரைனின் பாதுகாப்பு துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், கிரிமியா, டான்பாஸ், பெலாரஸ், டிரான்ஸ்னிஸ்டிரியா ஆகிய பகுதிகள் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தலைநகரான கீவ் நகரில் உள்ள உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உக்ரைன் வீரர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், அந்த வீரர் ஐ லவ் யூ மாம் அண்ட் டாடி என உருக்கமாக பேசியுள்ளார்.
0
0