உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி ஓரு ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்த போரால் ரஷிய அதிபர் விளாடிமின் புதினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவர் தற்போது உயிருக்கு பயந்து ரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தான் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் அவர் தற்போது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு உள்ளார். தான் செல்லும் பாதை தெரியாத அளவுக்கு புதினின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் ரகசிய ரெயில் பயணம் செய்து வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி க்ளெவ் கரகுலேவ் தெரிவித்து உள்ளார்.
விமானத்தை விட பாதுகாப்பு அதிகம் என்பதால் சிறப்பு கவச ரெயிலில் அவர் பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 180-க்கும் மேற்பட்ட பயணங்களை அவர் மேற்கொண்டதாக தெரிகிறது.
புதின் பல இடங்களில் ஒரே மாதிரியான அலுவலகங்களை அமைத்து உள்ளார். தான் இருக்கும் இடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க அவர் பெரும்பாலும் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகிறார்.
செல்போனை பயன்படுத்தினால் அவர் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து விடும் என்பதால் புதின் அதனை பயன்படுத்துவது இல்லை. பல நேரங்களில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொள்கிறார். அவர் எங்கு பயணம் சென்றாலும் அவருடன் பாதுகாவலர்கள், உணவு பரிசோதகர்கள்,மற்றும் என்ஜீனியர்கள் உடன் செல்கிறார்கள்.
தனக்கு நெருங்கியவர்களுடன் மட்டும் தான் அவ்வப்போது தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எங்கள் அதிபர் போர் குற்றவாளியாகி விட்டார்.
இதனால் பெரும்பாலான நேரத்தை கஜகஸ்தானில் உள்ள ரஷிய தூதரகத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதிகளுடன் பதுங்கு குழியில் செலவிடுதாகவும் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.