‘சும்மா சும்மா திட்டீட்டே இருந்தாரு’… முதலாளியின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த காவலாளி… பகீர் வாக்குமூலம்!!
Author: Babu Lakshmanan2 February 2023, 1:16 pm
முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காவலாளி அளித்த வாக்குமூலம் போலீசாரையே கதிகலங்க வைத்துள்ளது.
அண்மை காலமாக தொழிலாளிகளை கொத்தடிமை போல நடத்தும் கலாச்சாரம் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் திட்டிக் கொண்டிருந்த முதலாளிக்கு காவலாளியே எமனாக மாறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் பனன் என்ற 56 வயதுடையவரின் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சாவத்திடம் எப்போதும் கண்டிப்புடனும் கடுமையான சொற்களை பயன்படுத்தி அரோம் நடத்தி வந்து வந்திருக்கிறார். அதோடு, பல மணிநேரம் வேலையும் பார்க்க வைத்திருக்கிறார்.
இதனால், அரோம் மீது சாவத் உச்சகட்ட கோபத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது முதலாளி ஆரோமின் நெஞ்சிலேயே கத்தியால் குத்தியிருக்கிறார் சாவத். இது குறித்து தகவலறிந்து சென்ற தாய்லாந்து போலீசார் சாவத்தை கைது செய்தனர்.
கைதுக்கு பிறகான விசாரணையில் அவர் கூறியதாவது:- ரொம்ப நாளாகவே என் முதலாளி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தேன். வீட்டுக்கு சென்றால் கூட ஆரோம் என்னை எப்போதும் திட்டுவதும், என்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டதுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். இதனால் என்னால் தூங்க முடியாமல் போனது. அவர் என்னை கொடுமைப்படுத்தியதால் பல நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன் என்றார். இந்த சம்பவம் நேற்று (பிப்.,1) பாங்காக்கின் லம்பினி பூங்காவில் நடந்திருக்கிறது. குறித்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதில், சாவத்திடம் ஆரோம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சிய போதும் அவர் மீதான ஆத்திரத்தில் கருணையே இல்லாமல் ஆரோமின் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டு சாவத் சைக்கிளில் சென்றது பதிவாகியிருக்கிறது. நெஞ்சின் இடப்பக்கத்தில் கத்திக்குத்து வாங்கிய ஆரோமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசாரின் பிடியில் இருக்கும் சாவத் கொன்றது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும், என வாக்குமூலம் அளித்துள்ளார்.