ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… பயணம் செய்த 15 பேரும் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2024, 9:01 pm

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… பயணம் செய்த 15 பேரும் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!!

மாஸ்கோவில் இருந்து வெளியான தகவலின்படி, இலியுஷின்-76 விமானம் மாஸ்கோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த போது அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன, விமானிகள் உள்பட 8 பணியாளர்கள், 7 ராணுவ வீரர்கள் விமானத்தில் சென்றதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைனில் இரண்டு வருடங்களாக நடத்திய போர் தாக்குதலின் போது துருப்புக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் வான்வழி மற்றும் தரைவழி போக்குவரத்தை பயன்படுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1569

    0

    0