மக்களுக்கு பயந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே : ராணுவ ஜெட் விமானத்தில் தரையிறங்கிய காட்சி வெளியானது!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 9:23 am

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலே விமானத்தில் இருந்து வெளியேறும் காட்சி வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி வருகின்றனர்.

கடந்த 9ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இதையடுத்து அதிபர் மாளிகை சுற்றுலா தளம் போல பயன்படுத்திய மக்கள், பிரதமர் ரணில் பதவிவிலக கோரி அவர் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசே தனது மனைவியுடன் நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ஊர்ஜிதமாக தெரிவிக்கின்றது. விமான நிலையத்தில் இருந்து மிகப் பாதுகாப்பான முறையில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்

மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக தெரிவித்துள்ளன.

https://vimeo.com/729453202

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://vimeo.com/729453233

இதனிடையே இன்று காலை மாலத்தீவில் தலைநகரம் மாலே விமான நிலையத்திலிருந்து இருந்து வெளியேறும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 1892

    0

    0