5 சிறுவர்களுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் : ரூ.1 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் பயணம்… 8 பேரிடம் போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 3:45 pm

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இலங்கையில் இருந்து 150 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து மர்ம படகில் ஆபத்தான முறையில் பயணம் செய்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி ஒன்றாம் மணல் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கடலோர காவல் குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1635

    0

    0