லியோ படத்தை இங்கு ரிலீஸ் பண்ணாதீங்க… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய எம்பிக்கள் ; பதற்றத்தில் படக்குழு..!!

Author: Babu Lakshmanan
18 October 2023, 2:04 pm

லியோ படத்தை இங்கு ரிலீஸ் பண்ணாதீங்க… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய எம்பிக்கள் ; பதற்றத்தில் படக்குழு..!!

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதனால், படக்குழுவினர் மட்டுமின்றி நடிகர் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகிணியில் லியோ திரைப்படம் வெளியிடப்படாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் ‘லியோ’ திரைப்படத்தை நாளை திரையிட வேண்டாம் என அந்த நாட்டு தமிழ் எம்பிக்கள், நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர். நாளை நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், படம் வெளியானால் போராட்டத்திற்குப் பின்னடைவாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ