இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி… 4 பேர் கவலைக்கிடம் (வீடியோ)…!!

Author: Babu Lakshmanan
19 April 2022, 7:31 pm

இலங்கை : இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்

இலங்கையின் இந்த இக்கட்டான நிலைக்கு பொறுப்பேற்று ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியில் நேற்று ஒரே நாளில் எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உச்சத்தை தொட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரம்புக்கனை என்ற இடத்தில் 8 மணிநேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் அவர்களை கலைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் அவர்களை கலைக்க முற்பட்டனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1918

    0

    0