உக்ரைன் மீது அனைத்து பகுதிகளிலும் தாக்க ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவு…
Author: kavin kumar26 February 2022, 10:45 pm
உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த படையினருக்கு ரஷிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷியா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷியா இன்று தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷிய படையினருக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதலை தீவிரப்படுத்த ரஷிய ராணுவம் உத்தவிட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.