கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சிட்னி : கடல்பகுதியில் சிக்கிய 21 பேரின் கதி? கடும் சூறாவளியால் மீட்கும் பணி தோல்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 10:02 pm

ஆஸ்திரேலியா : கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது.

இதையடுத்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீடுகளில் சிக்கியுள்ளோரை படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில், 21 பேருடன் தத்தளித்த சரக்கு கப்பலை துறைமுகத்திற்கு இழுத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடும் சூறாவளி வீசியதால், அப்பணி தோல்வியடைந்தது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ