காசாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம்… இஸ்ரேல் பிரதமர் திடீர் அறிவிப்பு : மீண்டும் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 9:59 am

காசாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம்… இஸ்ரேல் பிரதமர் திடீர் அறிவிப்பு : மீண்டும் எச்சரிக்கை!!

இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி 40 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்ததாகவும். காசா நகரில் உள்ள பலஸ்தீன மக்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் காரணமாக காசா நகரில் வாழும் மக்கள் தான் அதிக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை அடைந்துள்ளனர் என கூறி போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் வலியுறுத்தினர்.

ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலை சேர்ந்த பணையக்கைதிகளை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், பணயக்கைதிகளை விடுவிக்க 4 நாள் போர் நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு இஸ்ரேல் அமைச்சரவையில் நடைபெற்றது. அதில், இஸ்ரேல் அமைச்சரவையில் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதாவது, ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கவே இந்த போர்நிறுத்தம் எனவும், இது போர் முற்றிலும் நிறுத்துவதற்கான அறிகுறி இல்லை எனவும், எங்கள் இலக்கான ‘ஹமாஸ் ‘ முற்றிலும் அழியும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

நாளை (வியாழன்) அல்லது நாளை மறுநாள் (வெள்ளி) முதல் ஒரு நாளைக்கு 10 பணயக்கைதிகள் வீதம் ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும், அதுவரையில் போர் நிறுத்தம் எனவும் இஸ்ரேல் ராணுவ அதிகாரி.தெரிவித்துள்ளார்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?