8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் இளைஞர் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

Author: kavin kumar
2 February 2022, 10:04 pm

8 பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வரும் இளைஞரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர், அந்நாட்டில் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வருகிறார். டாட்டூ கலைஞரான தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட், ஒரு பெண் பிரியர் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தனது அழகு, இளமை மற்றும் திறமையை வைத்து இவர் பல பெண்களையும் மயக்கி விடுவது இவருக்கு கை வந்த கலை என்றும் கூறப்படுபிறது. அதன் படி, டாட்டூ கலைஞரான டம் சரோட், தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில் சந்தித்து அவரிடம் பேசி, அந்த பெண்ணின் மனதை மாற்றி காதலித்து அவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, 2 வது மனைவியை அந்நாட்டில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வைத்து சந்தித்து, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் உள்ள மருத்துவமனையில் வைத்து ஒரு பெண்ணை சந்தித்து, அவரிடம் காதல் வயப்பட்டு 3 வதாக திருமணம் செய்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்து காதலித்து வந்த அந்த இளம் பெண்களை தனது 4, 5 மற்றும் 6 வது மனைவிகளாக அவர் அடுத்தடுத்து வரிசையாக திருமணம் செய்து உள்ளார். இதனையடுத்து, இந்த டம் சரோட், தனது தாயாருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று உள்ளார். அப்போது, அந்த கோயிலுக்கு வந்த ஒரு இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவரிடம் பேசி அந்த பெண்ணை இவர் 7வதாக திருமணம் செய்துகொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, தான் சுற்றுலா சென்ற இடத்தில் சந்தித்த ஒரு இளம் பெண்ணை காதலித்து, அந்த பெண்ணை 8 வதாக திருமணம் செய்துகொண்டார். இப்படியாக, 8 பெண்களையும் திருமணம் செய்துகொண்ட டம் சரோட், அந்த 8 மனைவிகளுக்கும் தெரியாமல் ஒவ்வொரு பெண்களுடனும் மாறி மாறி அவர் குடும்பம் நடத்தி வசித்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது கணவனின் செயல், 8 மனைவிகளுக்கும் தெரிய வந்த நிலையில், இது குறித்து அந்த 8 பேரும் தங்களது கணவனிடம் நியாயம் கேட்டு உள்ளனர். இப்படியாக, ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் இருப்பதை அந்த 8 மனைவிகளும் கண்டு பிடித்து நிலையில், அவர்கள் அனைவரையும் ஒரே வீட்டிற்கு வரவைத்து உள்ளார். அதன் பிறகு, அனைவரையும் சமாளித்து அந்த 8 மனைவிகளுடனும் ஒரே வீட்டில் டம் சரோட், தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,அனைத்து மனைவிகளும் வேலைக்கு செல்வார்கள் என்றும், வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின் 8 பேரும் ஒன்றாக நட்புடன் பழகி வருவதாக கூறிய அவர், ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும், மற்ற ஏழு பெண்களும் வேறு ஒரு அறையில் ஒன்றாக படுத்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் டம் சரோட் தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 2486

    0

    0