சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார்.
2009ஆம் ஆண்டு 42.72 கிராம் டயாமார்ஃபைன் என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
டயாமர்ஃபைன் பொருள் மூலமாக போதைப் பொருள் தயாரிக்க முடியும். அதேநேரத்தில் இது புற்றுநோயால் ஏற்படும் வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் இப்பொருள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்பொருளை நாகேந்திரன் தமது தொடைப்பகுதியில் உறை ஒன்றில் கட்டி சிங்கப்பூருக்கு கடத்தி வந்தார் என்பது வழக்கு.
இவ்வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் குற்றவாளி என 2019-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.
இதனடிப்படையில் கடந்த் ஆண்டு நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து தங்கராஜூ சுப்பையா என்பவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். 2013-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து 1 கிலோ கஞ்சாவை தங்கராஜூ சுப்பையா கடத்தினார் என்பது வழக்கு. தங்கராஜூ சுப்பையாவிடம் கஞ்சா கைப்பறப்படவில்லை.
ஆனால் கஞ்சாவை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.
2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது முதல் பல்வேறு முறையீட்டு மனுக்களை அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்து வந்தனர்.
ஆனால் அத்தனை மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை உறுதியானது. இன்று தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது.
ஐநா மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.