அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கு.. இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 2:29 pm

அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கு.. இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

இம்ரான் கான் மீது நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதில், பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் பயன்படுத்திய வழக்கில் அவருக்கு கடந்த வருடம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னரே பரிசு பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஆனாலும், இம்ரான் கான் வெளிவர முடியவில்லை. ஏனென்றால், இன்னொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதுதான் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக கூறப்படும் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

அதாவது, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உயரதிகாரிகளுடன் விரைவாக பேசும் வகையில் இருக்கும் சைபர் கேபிள் சேவையை இம்ரான் கான் தவறாக பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் தான் இம்ரான் கான் மீதான சைபர் கேபிள் முறைகேடு (அரசு ரசிகசியங்களை கசியவிட்ட) வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதில், இம்ரான் கான் மற்றும் அவரது கூட்டாளியான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?