பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் மேலும் 20 அடி உயர்த்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1889ம் ஆண்டு கஸ்டவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட ஈபிள் கோபுரம் உலக அளவில் புகழ்பெற்றதாகும். சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் பிரபல சுற்றுலா தலமாகவும் இது விளங்குகிறது. கடந்த 1929ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறைஸ்லர் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை ஈபிள் கோபுரம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வந்தது.
இந்த கோபுரம் 986 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட நிலையில், வானொலி ஒலிபரப்புக்காக கோபுரத்தின் உச்சியில் ஏராளமான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து அதன் உயரம் 1,063 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் வானொலி ஆண்டெனா ஈபிள் கோபுரத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் இறக்கப்பட்ட இந்த புதிய ஆண்டெனாவை பணியாளர்களால் பத்தே நிமிடத்தில் பொருத்தப்பட்டது. இதன் மூலம் ஈபிள் கோபுரத்தின் உயரம் மேலும் 20 அடி உயர்ந்து 1,083 அடியாக உள்ளது.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.