ஆபாச நடிகைக்கு பணத்தை அள்ளி அள்ளி கொட்டிய விவகாரம் : கிரிமினல் வழக்கில் கைதாகிறார் ட்ரம்ப்?

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 11:41 am

76 வயதான டொனால்டு ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது.

இதனை மறைப்பதற்காக நடிகைக்குத் தேர்தல் பரப்புரைக்கான நிதியில் இருந்து ட்ரம்ப் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டு அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மன்ஹாட்டான் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் விசாரணையில் உள்ளது. ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், இந்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகைக்குப் பணம் வழங்கியதிற்கான ஆதாரத்தையும் வழக்கறிஞர் அலுவலகம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு தான் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரம்ப் தற்போது புளோரிடா மாகாணத்தில் உள்ள நிலையில் விசாரணைக்காக அவர் நியூயார்க் வர வேண்டும்.

வழக்கை எதிர்கொள்வதற்காக அவரே நியூயார்க் திரும்பி நீதிமன்றத்தில் சரணடைவார் எனக் கூறப்படுகிறது.

கிரிமினல் வழக்கு விசாரணை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவண புகைப்படம் மற்றும் கை ரேகை போன்றவை எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.

எனவே, ட்ரம்ப்பையும் கையில் விலங்கு பூட்டி கைது செய்து, மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதற்கு முட்டுக்கட்டை போடவே ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார்.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 797

    0

    0