மறைந்த இங்கிலாந்து ராணிக்கு இயற்கையே அஞ்சலி செலுத்திய அதிசயம் : வானில் தோன்றிய இரட்டை வானவில்.. வியப்பில் மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 8:32 pm

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானத்தில் நேற்று இரட்டை வானவில் தோன்றியுள்ளது. இதனை ராணிக்கு அஞ்சலி செலுத்த வெளியில் கூடியிருந்த பொதுமக்கள் கண்டு வியப்படைந்தனர்.

பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த ஒருவர் கூறுகையில், “பக்கிங்ஹாம் அரண்மனையில் மனநிலை மிகவும் மோசமாக உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பலருக்கு ராணி என்றால் மிகவும் அன்பு அதிகம்” என்றார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2024

    5

    1