ட்ரம்ப் கொடுத்த அழுத்தம்..? அதிபர் தேர்தலில் இருந்து விலகிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி!!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2024, 2:17 pm
ட்ரம்ப் கொடுத்த அழுத்தம்..? அதிபர் தேர்தலில் இருந்து விலகிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி!!
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு உள்ள முக்கிய கட்சியானஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி மட்டுமே உள்ளது.
இந்த இரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிப்பார்கள். அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உட்க்கட்சித் தேர்தல் நடத்தப்படும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதனால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது அதிபராக உள்ள ஜோபேடன் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான குடியரசுத் தலைவர் சார்பில் பலர் அதிபர் வேட்பாளருக்கான விருப்பங்களை தெரிவித்தன. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு வேறு வழியில்லை, டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் விவேக் ராமசாமிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.