சிலி கடற்கரையில் குவியல் குவியலாக இறந்து கிடந்த லட்சக்கணக்கான மீன்கள்: சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு..!!
Author: Rajesh21 February 2022, 5:34 pm
சிலி நாட்டின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டின் Biobio பகுதியில் coliumo கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடற்கரை வருகை தந்தபோது முழுவதும் இறந்த மீன்களால் நிரம்பியிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கடல் தண்ணீரில் வழக்கத்தை விட அதிக அளவு ஆக்சிஜன் அளவு கூடியதால் தான் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். உள்ளூர் செய்தி ஊடகமான Biobio Chile படி, கடந்த ஆண்டு இப்பகுதியில் இதேபோல் பலமுறை ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.